மன்னார்குடி ரயில் இனி தாம்பரம் வரை மட்டுமே செல்லும்

X
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் இரவு 10:45 மணிக்கு மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10:55 மணிக்கு மன்னார்குடிக்கு ரயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற இருப்பதால் இம்மாதம் 19ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி வரை இரண்டு மாதங்களுக்கு மன்னார்குடியில் இருந்து சென்னை செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரம் வரை மட்டுமே செல்லும் என்றும் சென்னையிலிருந்து மன்னார்குடிக்கு இயக்கப்படும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரம் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

