மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கிய அமைச்சர்

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்களை அமைச்சர் வழங்கினார்.
மதுரையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மதுரை அவ்வை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று (ஜூன்.12)நடைபெற்ற விழாவில் தலா ரூ.1.25 லட்சம் மதிப்பிலான மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை நான்கு பயனாளர்களுக்கு வழங்கினார். உடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story