தென்காசியில் லோடு ஆட்டோ மீது பள்ளி வாகனம் மோதல்

X
தென்காசி மாவட்டம் தென்காசி யானைப் பாலம் அருகே தனியார் பள்ளி வாகனம் ஒன்று லோடு ஆட்டோ மீது மோதியது. இதனால் பள்ளி வாகனத்தில் இருந்த குழந்தைகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. குழந்தைகளை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக தென்காசி குற்றாலம் சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று மீட்பு பணி மற்றும் போக்குவரத்தை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர்.
Next Story

