விசிக பேரணிக்கு இஸ்லாமியர்களுக்கு அழைப்பு

தூத்துக்குடி மாவட்ட விசிக பேரணிக்கு இஸ்லாமியர்களுக்கு அழைப்பு
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்தும் மத சார்பின்மை பாதுகாக்க வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்பி தலைமையில் பேரணி; ஜாமியா பள்ளிவாசலில் இஸ்லாமிய மக்களுக்கு அழைப்பு மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்தும் மதச் மதசார்பின்மையை பாதுகாப்பதை வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் மாபெரும் எழுச்சி பேரணி ஜூன் 14ஆம் தேதி நடைபெறுகிறது என தலைவர் தொல் திருமாவளவன் எம்பி அறிவித்தார். இதை தொடர்ந்து இந்த பேரணியில் லட்சக்கணக்கான மக்களை திரட்ட வேண்டும் என்பதற்காக விசிக தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன் தலைமையில் நிர்வாகிகள் தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை முடிந்து வருகை தந்த இஸ்லாமியர்களிடம் மத்திய அரசு ஒருதலை பட்சமாக கொண்டு வந்துள்ள வக்ஃபு வாரிய சட்டத்திற்கு எதிரான பேரணி திருச்சியில் நடைபெறுகிறது இதில் இஸ்லாமியர்கள் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.
Next Story