ஆவின் பாலகத்தில் பூட்டை உடைத்து திருட்டு: போலீஸ் விசாரணை!

ஆவின் பாலகத்தில் பூட்டை உடைத்து திருட்டு: போலீஸ் விசாரணை!
X
தூத்துக்குடியில் ஆவின் பாலகத்தில் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் ஆவின் பாலகத்தில் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி பி&டி காலனி 5வது தெருவைச் சேர்ந்தவர் ராமஜெயம் மகன் சற்குணராஜ் (38). இவர் அப்பகுதியில் ஆவின் பாலகம் மற்றும் மளிகை கடை நடத்தி வருகிறார், இவர் நேற்று இரவு 11 மணிக்கு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை 4 மணியளவில் கடையில் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. அப்போது பால் சப்ளை செய்ய வந்த வாகனத்தின் ஓட்டுநர், சற்குணராஜ்க்கு போன் செய்து இதுகுறித்து தகவல் கூறியுள்ளார். இதையடுத்து சற்குணராஜ் வந்து பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த சுமார் ரூ.8ஆயிரம் பணம் திருடு போகியிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story