இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி ஒருவர் பலி

இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி ஒருவர் பலி
X
நீடாமங்கலத்தில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இளங்கோவன். இவர் இன்று காலை நீடாமங்கலம் வந்து மீன் வாங்கிக் கொண்டு மீண்டும் ஊர் திரும்பி உள்ளார்.அப்போது மன்னார்குடியில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பேருந்து நீடாமங்கலம் கோரையாறு பாலம் அருகே சென்ற போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இளங்கோவன் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது இதில் பலத்த காயமடைந்த இளங்கோவன் சிகிச்சைக்காக நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்துக்கான காரணம் குறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story