திருவாருரில் அதிமுக வாக்குசாவடி முகவர் கூட்டம்

X
அதிமுக கழக அமைப்புச் செயலாளரும், திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் தமிழக அமைச்சருமான ஆர். காமராஜ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணை செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திருவாரூர் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான திருச்சி இளவரசன் கலந்து கொண்டார். திருவாரூர் மாவட்டம், திருவாரூர் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு ஒன்றிய பகுதிகளில் அடியக்கமங்கலம், கள்ளுக்குடி உள்ளிட்ட 16 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள 42 வாக்குச்சாவடி முகவர்களை சந்தித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வருகின்ற 2026 ஆம் வருடம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்.. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்..தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடியார்-ன் ஆலோசனைக் கிணங்க..தமிழகம் முழுதும் 234 தொகுதிகளிலும் வாக்கு சாவடி முகவர்கள் நியமிக்கப்பட்டு.. அனைத்து பகுதிகளிலும் கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஒரு பூத்துக்கு 9 முகவர்கள் என்கிற அடிப்படையில் 6 ஆண்கள், 3 பெண்கள் வீதம் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் மற்றும் திருவாரூர் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் இளவரசன் ஆகியோருடன் ஒவ்வொரு பூத்துகள் வாரியாக 42 பூத்து களைச் சார்ந்த பெண்கள் உள்ளிட்ட 378 முகவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.இதில் இளைஞர் இளம் பெண்கள் பாசறை திருவாரூர் மாவட்ட செயலாளர் கலியபெருமாள், தகவல் தொழில் நுட்ப பிரிவு திருவாரூர் மாவட்ட செயலாளர் சின்னராஜ், ஷோபா உள்ளிட்ட அதிமுக பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

