கரூர்-சொத்து தகராறு - தங்கையை கத்தியால் குத்திய அண்ணன் தலைமறைவு.

கரூர்-சொத்து தகராறு - தங்கையை கத்தியால் குத்திய அண்ணன் தலைமறைவு.
கரூர்-சொத்து தகராறு - தங்கையை கத்தியால் குத்திய அண்ணன் தலைமறைவு. கரூர் செங்குந்தபுரம் 5-வது கிராஸ் -ஐ சேர்ந்தவர் கோபிநாத் வயது 47. இவர் பிஜேபி கரூர் மாவட்ட முன்னாள் பொது செயலாளர்.இவரது தங்கை சுமிதா வயது 44. இவர்கள் இருவருக்கும் கரூர் அடுத்த செம்மடை பகுதியில் உள்ள 50 சென்ட் நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இது தொடர்பாக ஜூன் 9ஆம் தேதி செங்குந்தபுரம் 3-வது கிராசில் உள்ள கோபிநாத் அலுவலகம் முன் அண்ணன் தங்கை இருவரும் சொத்து பிரச்சனை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பிஜேபி முன்னாள் மத்திய நகர தலைவர் கார்த்திகேயன் கோபிநாத்துக்கு ஆதரவாக பேசி சுமிதாவிடம் தகராறுசெய்துள்ளார். அந்த நேரம் கோபிநாத் தனது கையில் வைத்திருந்த கத்தியால் தங்கை சுமிதா கையில் குத்தி காயப்படுத்திவிட்டு தப்பி ஓடினார். காயம்பட்ட சுமிதா கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகராறில் ஈடுபட்ட கார்த்திகேயனை கரூர் காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கோபிநாத்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர். .
Next Story