தனியார் விடுதியில் தாய், மகள் தற்கொலை : போலீஸ் விசாரணை!

தனியார் விடுதியில் தாய், மகள் தற்கொலை : போலீஸ் விசாரணை!
X
திருச்செந்தூர் தனியார் விடுதியில் விஷம் குடித்து தாய், மகள் தற்கொலை செய்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தனியார் விடுதியில் விஷம் குடித்து தாய், மகள் தற்கொலை செய்து கொண்டனர். குமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம், முடக்குளத்தை சேர்ந்தவர் மோகன் நாயர். இவரது மனைவி அம்பிகா (67). இவரது மகள் மாலினி (40). மாலினி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் தனது தாய் வீட்டில் தங்கி உள்ளார். இதனால் மனவிரக்தி அடைந்த தாய்-மகள் இருவரும் தற்கொலை செய்ய திட்டமிட்டு அதற்காக பூச்சி மருந்து வாங்கிக்கொண்டு திருச்செந்தூர் வந்து நேற்று இரவு தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். அங்கு வைத்து குளிர்பானத்துடன் கலந்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளனர். அப்போது வாந்தி வரவே விடுதி ஊழியரிடம் நடந்ததை கூறி உள்ளனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story