தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு தேர்வான குமாரபாளையம் சிறுவன்

X
Komarapalayam King 24x7 |13 Jun 2025 5:22 PM ISTஉத்தரகண்ட் மாநிலத்தில் நடக்கவிருக்கும் தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு குமாரபாளையத்தை சேர்ந்த சிறுவன் இன்பா தேர்வாகியுள்ளான்.
குமாரபாளையத்தை சேர்ந்த இன்பா என்ற கராத்தே வீரர், சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற 41வது மாநில கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் 8 வயது, 25 கிலோ குமிதே பிரிவில் தங்கம் வென்றார். இதன் மூலம், உத்தரகாண்ட் மாநிலம், டெஹ்ராடன்னில் நடைபெறும் 4வது தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம் சார்பாக தேர்வாகியுள்ளார். இவரது வெற்றியை , திருப்பூர் மாவட்ட கராத்தே சங்கம், இன்பாவை சிறப்பாக விழாவுடன் கௌரவித்து, பண பரிசும் வழங்கியது. இது இன்பாவின் பயணத்துக்கு ஒரு சிறந்த தொடக்கம் மட்டுமே. அவர் தேசிய மட்டத்திலும் சர்வதேச நிலைகளிலும் தமிழ்நாட்டை பெருமை படுத்துவார் என நம்புகிறோம், என அவரின் பயிற்சியாளர் கெளதம் தெரிவித்தார்.
Next Story
