பாப்பநாயக்கன்பட்டியில் சட்ட விரோத மது விற்பனை. ஒருவர் கைது.

பாப்பநாயக்கன்பட்டியில் சட்ட விரோத மது விற்பனை. ஒருவர் கைது.
பாப்பநாயக்கன்பட்டியில் சட்ட விரோத மது விற்பனை. ஒருவர் கைது. அரவக்குறிச்சி அருகே பாப்பநாயக்கன்பட்டியில் சட்ட விரோத மது விற்பனை நடப்பது குறித்து எஸ்.ஐ ராஜசேர்வைக்கு கிடைத்த தகவலின் பேரில் ஜூன் 12-ம் தேதி மாலை 6 மணி அளவில் பாப்பநாயக்கன்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட, அரவக்குறிச்சி தாலுகா, வேலம்பாடி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் வயது 35 என்பவரை கைது செய்து ,விற்பனைக்கு வைத்திருந்த 26 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து அவரை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.
Next Story