கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த வாலிபர் கைது

கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த வாலிபர் கைது
X
திண்டுக்கல்லில் உடைந்த பீர் பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த வாலிபர் கைது
திண்டுக்கல்லை சேர்ந்த அன்பு என்பவர் மேட்டுப்பட்டி சந்தைப்பேட்டை ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த பாரதிபுரம், J.J.நகரை சேர்ந்த பழனிச்சாமி மகன் ராகவன்(37) என்பவர் உடைந்த பீர்பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பணம் பறிக்க முயன்றதாக அன்பு அளித்த புகாரின் பேரில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ராகவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story