இருதய அறுவை சிகிச்சை மருத்துவர்களின் மாநாடு.
அறுவைச் சிகிச்சையில் மருத்துவ சாதனை நிகழ்வாக முதல் முறையாக எண்டோஸ்கோபிக் இதய அறுவைச் சிகிச்சை மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்தியா, சிங்கப்பூர், மலேஷியா, துபாய், இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிட்சை நிபுணர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். இத்தகைய எண்டோஸ்கோபிக் அறுவைச்சிகிச்சையில் உலக அளவில் நவீன தொழில் நுட்ப முன்னோடி மருத்துவ அறுவை நிபுணர்கள் இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், கிரீஸ் உள்ளிட 20 நாடுகளில் இருந்து மாநாட்டில் தங்கள் மருத்துவ அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். உலகம் முழுவதும் எண்டோஸ்கோபிக் இதய அறுவைச்சிகிச்சையைச் செய்வதில் உலகளவில் முன்னணியில் உள்ள 50 பேர் மட்டுமே உள்ளனர், அவர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ராம்பிரசாத் ஆவார். இந்தியாவில் குறிப்பாக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் எண்டோஸ் கோபிக் இதய அறுவைச்சிகிச்சையில் முன்னோடியாக விளங்குகிறார். தெற்கு ஆசியா முழுவதும் இருந்து மருத்துவர்கள் 2 நாள் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
Next Story




