மணல் லாரியை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

X
Paramathi Velur King 24x7 |13 Jun 2025 7:12 PM ISTபரமத்தி வேலூர் அருகே 18 கி.மீ. தூரம் பின் தொடர்ந்து மணல் ஏற்றி வந்த லாரியை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
பரமத்தி வேலூர்,ஜூன்.13: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதிகளில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கரூரிலிருந்து முன்னாள் அதிமுகஅமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் கரூர்-சேலம் தேசியநெடுஞ் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது மண்மங்கலம் அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக அரசு அனுமதி இன்றி மணல் அள்ளி வந்த லாரியை பார்த்துள்ளார். அந்த லாரிக்கு பின்னால் சுமார் 18 கிலோமீட் டர் தூரம் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் மாவட்டம் எல்லையான பரமத்திவேலூர் போலீஸ் சோதனைச் சாவடி அருகில் லாரியை மடக்கி பிடித்து சோதனை சாவடியில் இருந்த காவலர்களிடம் மணல் லாரியை ஒப்படைத்தார். அவர்கள் கரூர் மாவட்டத்தில் நடந்த மணல் திருட்டு சம்பவம் என்பதால் மணல்லாரியை வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு மணல் லாரியை கொண்டு வந்து காவல் துறை ஆய்வாளரிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஒப்படைத்தனர். அங்கு அதிமுக நிர்வாகி சரவணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கும் படி கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எம். ஆர் .விஜயபாஸ்கர் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்று விட்டார். அதனைத் தொடர்ந்து திருட்டுத்தனமாக மணலை அள்ளி வந்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். லாரியை பிடித்த இடம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி போலீஸ் எல்லைக்கு உட்பட்டது என்பதால் மணல் லாரியை பரமத்திவேலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் திருட்டு மணல் வந்த லாரி டிரைவர் மற்றும் கிளினிரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கரூர் மாவட்டம் திருமுக்கூடலில் இருந்து டிப்பர் லாரியில் சுமார் 8 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை அடுத்து டிப்பர் லாரி டிரைவர் பரமத்தி வேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையத்தை சேர்ந்த சிவகுமார் (44) லாரி கிளி னர் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த மகேஸ்வரன், ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள இச்சிபாளையத்தை சேர்ந்த சரவணன் என தெரியவந்தது. அதன் பேரில் மூன்று பேரையும் போலீசார் கைது செய்து மணல் கடத்தி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.மேலும் தலைமறைவான பரமத்திவேலுார் அருகே உள்ள அனிச்சம்பாளையத்தை சேர்ந்த ராஜா (எ) பிளேடு ராஜாவை தேடி வருகின்றனர்.
Next Story
