பர்கூர் அருகே டூவீலர் கவிழ்ந்து துணி வியாபாரி உயிரிழப்பு.

பர்கூர்  அருகே டூவீலர் கவிழ்ந்து துணி வியாபாரி உயிரிழப்பு.
X
பர்கூர் அருகே டூவீலர் கவிழ்ந்து துணி வியாபாரி உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர் முனி குண்டுலு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (39) இவர் வெளியூரில் சென்று கடைகளுக்கு துணி வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சின்ன பர்கூர் பைபாஸ் சாலையில் இருந்து தனது வீட்டிற்கு டூவீலரில் சென்ற போது சாலையில் கொட்டி வைத்திருந்த ஜல்லிக்கற்கள் மீது டூவீலர் ஏறியதில் நாகராஜன் தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு பர்கூர் அரசு மருத்துவமனை மற்றும் மேல் சிகிச்சைக்கு ஒரப்பத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நாகராஜனை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று கூறினர். இது குறித்து தகவல் அறிந்து வந்தத பர்கூர் போலீசார் உடலை மீட்டு இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
Next Story