டூவீலர் மீது கார் மோதியதில் முதியவருக்கு கை , கால்களில் எலும்பு முறிவு, கார் ஒட்டி வந்த நபர் கைது

X
Komarapalayam King 24x7 |13 Jun 2025 8:26 PM ISTகுமாரபாளையத்தில் டூவீலர் மீது கார் மோதியதில் முதியவருக்கு கை , கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன், கார் ஒட்டி வந்த நபர் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், வனவாசி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன், 66. பெட்டிக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் மாலை 01:00 மணியளவில், சேலம் கோவை புறவழிச்சாலை, கொங்கு மண்டபம் அடுத்த சாலையில், தனது டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தில் சென்ற போது, எதிர் திசையில் வந்த, ரெனால்ட் குவிக் கார் ஓட்டுனர், இவர் வந்த டூவீலர் மீது வேகமாக மோதினார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மாரியப்பனுக்கு, கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் இவரை நசியனூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், கார் ஓட்டுனர் கேரளா, பாலக்காடு, பகுதியை சேர்ந்த மது, 28, என்ற ஆக்டிங் ஓட்டுனரை கைது செய்தனர்.
Next Story
