கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் மீது தாக்குதல்

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் மீது தாக்குதல்
X
கொல்லங்கோடு
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே அடைடைக்காகுழி பகுதியை சேர்ந்தவர் வசந்தன் மகன் ஷாஜி (38). தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயமோகனன் (45). இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவார்கள். ஷாஜி மனைவிக்கும் ஜெயமோகனனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஷாஜியின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் ஷாஜிக்கும் ஜெயமோகனுக்கும் இடையே முன்வருதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ஜெயமோகனன் அவரது நண்பர்களுடன் ஷாஜி வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். வீட்டில் இருந்த ஷாஜி, அவரது தந்தை வசந்தன் ஆகியோரை தாக்கியதுடன் வீட்டில் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேத படுத்தினார்கள். மேலும் ஷாஜியின் மோட்டார் சைக்கிளையும் உடைத்து சேதப்படுத்தினார்கள். இதில் காயம் அடைந்த ஷாஜி சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் ஜெயமோகனன், அபிஷாந்த் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடுகிறார்கள். இந்த நிலையில் ஜெயமோகனின் தந்தை பிரபாகரன் என்பவர் கொல்லங்கோடு போலீசில் அளித்துள்ள புகாரில்அவர் வீட்டில் இருந்தபோது ஷாஜி வீட்டிற்கு வந்த தன்னை அவதூராக பேசி தாக்கியதாக புகார் அளித்தார். இதன் பேரில் ஷாஜி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story