தஞ்சாவூரில் வேதியியல், சர்ஜிக்கல் பொருட்கள் விற்பனை கடைகளில் காவல்துறையினர் ஆய்வு

X
தமிழ்நாடு காவல் துறை மத்திய மண்டலத்தில், தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் பகவதி சரணம், திருச்சி மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர், தஞ்சாவூர் நகரப் பகுதிகளில் செயல்பட்டுவரும் வேதியியல் மற்றும் சர்ஜிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு நேரில் சென்று திடீர் ஆய்வினை மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது அந்நிறுவனங்களில் மெத்தனால் மற்றும் எத்தனால் ஆகிய பொருட்கள் சட்டவிரோத விற்பனை ஏதும் நடைபெறுகிறதா? மற்றும் மெத்தனால் இருப்பு ஏதேனும் உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். பின்னர் அந்நிறுவன உரிமையாளர்களிடம் மெத்தனால் மற்றும் எத்தனால் சட்டவிரோதமாக விற்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் மீது உரிய சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டனர். மேலும், அந்நிறுவனங்களில் விற்பனை செய்யப்படும் வேதிப்பொருட்களுக்கும் உரிய உரிமம் பெற்ற பிறகே விற்பனை செய்யப்படவேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Next Story

