தனியார் நிதிநிறுவன அலுவலரை கத்தியால் தாக்கிய வசூல் முகவர் கைது 

தனியார் நிதிநிறுவன அலுவலரை கத்தியால் தாக்கிய வசூல் முகவர் கைது 
X
கைது
தஞ்சாவூர் அருகே  வசூல் பணத்தை தவறாக பயன்படுத்தியது குறித்து கேட்ட, மண்டல உதவி மேலாளரை கத்தியால் தாக்கிய வசூல் முகவரை தமிழ்ப் பல்கலைக்கழக காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் அருகே, பிள்ளையார்பட்டி செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெபதுரை என்பவரின் மகன் ஹீலர் சாம் ஜெபதுரை (33), இவர் தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் முகவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வசூல் பணத்தில் ரூ.2 ஆயிரத்தை ஹீலர் சாம் ஜெபதுரை முறைகேடாக பயன்படுத்தியதாக மேல் அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த தனியார் மைக்ரோ பைனான்ஸில் மண்டல உதவி மேலாளராக பணியாற்றும் நாமக்கல் ராசிபுரம் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன் கமலக்கண்ணன் (29) ஹீலர் சாம் ஜெபதுரையிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியதில், ஹீலர் சாம் ஜெபதுரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கமலக்கண்ணனை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதில் கமலக்கண்ணன் படுகாயம் அடைந்தார்.  இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக காவல்நிலையத்தில் கமலக்கண்ணன் கொடுத்த புகாரின் பேரில், உதவி ஆய்வாளர் விஷ்ணு பிரசாத் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஹீலர் சாம் ஜெபதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story