இளம்பெண்ணை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய ஜோதிடர் கைது 

இளம்பெண்ணை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய ஜோதிடர் கைது 
X
கைது
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு காவல் சரகத்திற்குட்பட்ட, ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது பெண்ணை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய ஜோதிடரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு காவல் சரகத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இந்த சிறுமிக்கும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஜோதிடம் பார்க்கும் கொடியரசன் (24) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், கொடியரசன் அந்த சிறுமியை காதலிப்பதாகக் கூறி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.  இத்தகவல் குழந்தை பாதுகாப்பு நல அலுவலர் ஞானம் என்பவருக்கு தெரியவந்தது. இது குறித்து ஞானம் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் காவல் ஆய்வாளர் சுதா மற்றும் காவல்துறையினர் கொடியரசனிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. தொடர்ந்து ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கொடியரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story