விமான விபத்தில் பலியானவர்களுக்கு பா.ஜ.க வினர் அஞ்சலி !
குஜராத் மாநிலம் ஆமதபாத்தில் இருந்து லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், 825 அடி உயரத்தில் இருந்தபோது, மருத்துவ மாணவர் விடுதி மீது விழுந்து வெடித்ததில் 241 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 1 பயணி மட்டும் உயிர் தப்பினார். விடுதியில் இருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 33 பேரும் உயிரிழந்தனர். இந்த நிகழ்வை தொடர்ந்து, கோவை சிங்காநல்லூரில் பா.ஜ.க.வினர் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தினர். உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.
Next Story



