கோவை சாலை விபத்தில் தந்தை-மகன் உயிரிழப்பு : சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

கோவை சாலை விபத்தில் தந்தை-மகன் உயிரிழப்பு : சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
X
கோவை சரவணம்பட்டி அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்தார்.
கோவை சரவணம்பட்டி அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்தார். ஆந்திரத்தைச் சேர்ந்த மெனுமெட்ஷா ராஜேஷ் (39), கோவையில் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்து வந்தார். அவரது மகன் வினித் வர்மா (9), மூன்றாம் வகுப்பு மாணவன். ஸ்கேட்டிங் பயிற்சிக்காக ராஜேஷ் பைக்கில் மகனை அழைத்து சென்ற போது, காளப்பட்டி சாலை சந்திப்பில் டிப்பர் லாரி பைக் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். போக்குவரத்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிப்பர் லாரி டிரைவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story