தொடக்க கல்வி அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தொடக்க கல்வி அலுவலரை  கண்டித்து ஆர்ப்பாட்டம்
X
நாகர்கோவில்
குமரி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை.இதனால் ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.IFHRM பிரச்சனையால் ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை அறிந்து அதனை சரி செய்திடக் கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் மாவட்ட கல்வி அலுவலரை (தொடக்க கல்வி) சந்தித்து முறையிடச் சென்ற போது. தங்கப் பொறுப்பாளர்களுக்கு தான் பதில் சொல்ல வேண்டியதில்லை எனவும், எந்தச் சங்க பொறுப்பாளர்களும் சங்கத்தின் சார்பில் தன்னைச் சந்திக்க வரக்கூடாது எனவும் அவதூறாகப் பேசியுள்ளார். இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் டயஸ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.மாநிலச் செயலாளர் ராஜ்குமார் தொடக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சுமகாசன் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவரும் கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான பென்னெட் ஜோஸ், தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் டோமினிக்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட கல்வி அலுவலர் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Next Story