கோவை: போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது !

கோவை: போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது !
X
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து ஐந்தாவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகராட்சியில் பணி நிரந்தரம், மாவட்ட ஆட்சியர் அறிவித்த 770 ரூபாய் ஊதியம், மற்றும் வைப்பு நிதி ரசீது வழங்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஐந்தாவது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்திருந்தார். நேற்றும் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்ததால், காவல்துறையினர் போராட்டக்காரர்களை கைது செய்தனர். ஆட்சியர் அலுவலகம் முன் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Next Story