ஊத்தங்கரை அருகே மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் உயிரிழப்பு.

ஊத்தங்கரை அருகே மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் உயிரிழப்பு.
X
ஊத்தங்கரை அருகே மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரபாணி (59) இவர் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு மின்சார துறை அலுவலகத்தில் போர்மேனாக பணிபுரிந்து வந்தார். நேற்று கருமாண்டபதி கிராமத்தில் உள்ள மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஊத்தங்கரை போலீசார் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story