மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்த இளைஞர் கைது

X
திண்டுக்கல்லை சேர்ந்த கார்த்திக் ஆட்டோ டிரைவர், இவர் திருச்சி ரோடு கல்லறைமேடு அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது வேடபட்டியை சேர்ந்த பாண்டி மகன் அன்பழகன்(35) என்பவர் ஆட்டோவை வழிமறித்து உடைந்த பீர்பாட்டிலைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை ஏற்படுத்தி பணம் பறிக்க முயற்சி செய்ததாக கார்த்திக் அளித்த புகாரின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட அன்பழகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

