கோவை: செல்போன் வாங்கி தராததால் மாணவன் தற்கொலை !

X
கோயம்புத்தூர்,தொண்டாமுத்தூர் அருகேயுள்ள உளியம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகனான ராகுல் (வயது 15) பிளஸ்-1 வகுப்பில் கல்வி பயின்று வந்தார். அவரது மூத்த சகோதரர் தற்போது ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். மூத்த மகனுக்கு பெற்றோர் சமீபத்தில் செல்போன் வாங்கி வழங்கியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த ராகுலும், தனக்கும் செல்போன் வாங்கித் தருமாறு பெற்றோரிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், பத்தாம் வகுப்பை மட்டுமே முடித்த நிலையில், பொதுத் தேர்வு முடிந்த பிறகு செல்போன் வாங்கித் தருவதாக பெற்றோர் கூறியுள்ளனர். இந்த நிலையில், தற்கோபம் அடைந்த ராகுல், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

