நள்ளிரவு மீன் பிடிக்க கடலுக்கு செல்ல மீனவர்கள் தயார்

X
தூத்துக்குடி 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைவதை முன்னிட்டு கடலுக்குச் செல்ல தூத்துக்குடி சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் தயாராகி வருகின்றனர் தூத்துக்குடியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் வருகிற 16ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை கடலுக்குச் செல்கின்றனர் தமிழகம் முழுவதும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 60 நாட்கள் தடைக்காலம் வருகிற ஜூன் 14 ஆம் தேதி இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது இதைத் தொடர்ந்து தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தங்கள் படக்குகளில் பல்வேறு பராமரிப்பு பணிகளை செய்து சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் கடலுக்கு செல்வதற்காக மீன்பிடி வலைகள் மிதவைகள் ஆகியவற்றை தயார் செய்து படகுகளில் ஏற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மீன்பிடி தடைக்காலம் இன்று ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவுடன் முடிவடையும் நிலையில் தூத்துக்குடி மீனவர்கள் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை கடலுக்கு செல்ல மாட்டார்கள் என்பதால் வருகிற 16-ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு செல்ல உள்ளனர்.
Next Story

