பேட்டையில் மூன்று பேர் அதிரடி கைது

பேட்டையில் மூன்று பேர் அதிரடி கைது
X
கைது
நெல்லை மாநகர பேட்டை சத்யாநகர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த லூர்துசாமி தனது வீட்டிற்கு அருகே நிறுத்தி இருந்த பைக்கை எடுத்து சென்றுள்ளார். அப்போது பைக் அருகே நின்ற நாயை விரட்டினார். இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த குமார், அவரது மனைவி மகேஷ் அவரது சகோதரி முனியம்மாள் ஆகிய 3 பேரும் லூர்து சாமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.
Next Story