கோவை: குடிநீர் குறைபாடு : எம்.எல்.ஏ- வை முற்றுகையிட்ட மக்கள்

X
காரமடை அருகே தேக்கம்பட்டி ஊராட்சி கிட்டாம்பாளையம் கிராமத்தில் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. செல்வராஜ் வளர்ச்சி பணிக்காக நேற்று பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நேரத்தில், பல மாதங்களாக குடிநீர் சரிவர வழங்கப்படவில்லை என பொதுமக்கள் அவரை முறையிட்டனர். இதற்கு பதிலளித்த எம்.எல்.ஏ., பவானி ஆற்றில் இருந்து தாசம்பாளையம் நீரேற்று நிலையம் வழியாக குடிநீர் வழங்கப்படுகிறது என்றும், பழுதடைந்த வால்வுகளை மாற்ற ஊராட்சி நிர்வாகத்திடம் பணியாளர்கள் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். பணிகள் சரிவர நடைபெறாததை அறிந்து, தாமே நேரில் சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பின்னர் அங்கு கூடிய பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Next Story

