அமராவதி ஆற்றில் வெள்ளம் -பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை.

அமராவதி ஆற்றில் வெள்ளம் -பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை.
அமராவதி ஆற்றில் வெள்ளம் -பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை. திருப்பூர் மாவட்டத்தில்உள்ள அமராவதி அணையின் நீர் கொள்ளளவு 90 அடி ஆகும். இன்று காலை 6 மணி நிலவரப்படி 85 அடி நீர் இருப்பு உள்ளது. மேலும் அமராவதி அணைக்கு நீர் வரும் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் விரைவில் நிரம்பி உபரி நீர் திறக்கும் சூழல் ஏற்படும் என்பதால் ,அமராவதி ஆற்றின் கடைமடை பகுதியான கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகள் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அமராவதி அணை நிர்வாக பொறியாளர்கள் கரூர் மாவட்ட அலுவலகத்திற்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளனர். இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட நிர்வாகம் அமராவதி ஆற்று பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், கால்நடைகளை குளிப்பாட்டவும், பொதுமக்கள் ஆற்றில் இறங்கி செல்பி எடுப்பது கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.
Next Story