மருத்துவமனை முன்பு இறுதிச் சடங்கு. பரபரப்பு

X
மதுரை அரசரடி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற வந்த தூய்மை பணியாளர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது உடலை வழங்க மருத்துவமனை நிர்வாகம் மீதிகட்டணத்தை கோரியதால், அவரது உறவினர்கள் மருத்துவமனை வாயிலில் இறுதிச்சடங்கு நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தஅண்ணாதுரை இதய நோய்க்காக மதுரையில் அரசரடி பகுதியில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக ரூ.4 லட்சம் கட்டணமாக தெரிவிக்கப்பட்ட நிலையில், உறவினர்கள் ரூ.2 லட்சம் செலுத்தியுள்ளனர். வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி அண்ணாதுரை உயிரிழந்தார். உடலை வழங்க மீதி ரூ.2 லட்சம் கட்டணத்தை செலுத்த வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், மருத்துவமனை வாசலிலேயே இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளத் தொடங்கினர். சம்பவ இடத்திற்கு எஸ்.எஸ். காலனி போலீசார் விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், மருத்துவமனை நிர்வாகம் பாதிக்கபட்டவர் சிகிச்சை பெறும் நிலையிலேயே உயிரிழந்ததால், எந்தவித கட்டணமும் இன்றி உடலை வழங்கப்படும்” என அறிவித்தது.
Next Story

