புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்களை திறந்து வைத்த அமைச்சர் மா. மதிவேந்தன்.

X
NAMAKKAL KING 24X7 B |14 Jun 2025 4:04 PM ISTஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ரூ.37.55 இலட்சம் மதிப்பீட்டில் 2 புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்களை திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ரூ.37.55 இலட்சம் மதிப்பீட்டில் 2 புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்களை திறந்து வைத்தார் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், A.மின்னக்கல் ஊராட்சி மற்றும் இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் மலையாம்பட்டி ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் முன்னிலையில், ரூ.37.55 இலட்சம் மதிப்பீட்டில் 2 புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்களை திறந்து வைத்து, 06 சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு கடந்த 4 ஆண்டுகளில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டுமென்ற உன்னத நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையில் பால் உற்பத்தியாளர்களின் நலன் காத்திட லிட்டருக்கு ரூ.3.00 வரை ஊக்கத்தொகை, கொழுப்பு நிறைந்த பாலுக்கு ரூ.1.00 கூடுதல் தொகை மற்றும் போனஸ் தொகை வழங்கப்பட்டு வருகிறது.ஆவின் கால்நடைத் தீவனம் விற்பனை செய்யும் சங்க பணியாளர்களுக்கு 50 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.30/- ஊக்கத்தொகையாகவும், சங்கங்களுக்கு ஊக்கத்தொகையாகவும் வழங்கப்பட்டு வருகிறது. வருடந்தோறும் சங்கம் ஈட்டிய இலாபத்தில் பால் ஊற்றும் உறுப்பினர்களுக்கு 50% போனஸ், பங்கு ஈவு மற்றும் ஆதரவு தள்ளுபடி தொகை வழங்கப்படுகிறது. பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்கு 85% மானியத்தில் கால்நடை காப்பீட்டு வசதி செய்யப்பட்டு வருகிறது. சங்கங்களில் பால் வழங்கி வரும் உறுப்பினர்களின் கறவை மாடுகளுக்கு வாராந்திர சிகிச்சை, அவசர கால சிகிச்சை மற்றும் மலட்டுத்தன்மை நீக்க சிகிச்சை ஆகிய மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டுவருகிறது.மேலும், பால் வழங்கும் உறுப்பினர்களின் கறவை மாடுகளுக்கு கால்நடை பராமரிப்பு கடன் (KCC) ஒரு மாட்டிற்கு ரூ.18,000/- வீதமும் மற்றும் கறவை மாடுகள் வாங்க அதிகபட்சமாக ரூ.1,60,000/- வங்கியின் மூலம் கடன் வசதி ஏற்படுத்தி தரப்படுகிறது. தற்போது ஒன்றியத்திற்கு பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) மூலம் ஒரு மாட்டிற்கு ரூ.60,000/- வீதம் 1198 கறவை மாடுகள் வாங்க ரூ.7.19 கோடி அரசு கடன் வசதி நடப்பாண்டு வழங்கப்பட உள்ளது. பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நல நிதி திட்டத்தின் கீழ் சங்கத்தில் பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு மாதம் ரூ.10/- சந்தாவில் விபத்துக்களில் இறந்தால் ரூ.4,00,000/-, இரண்டு உறுப்புக்கள் இழந்தால் ரூ.2,25,000/-, ஒரு உறுப்பு இழந்தால் ரூ.1,00,000/-, திருமண உதவி தொகை ரூ.60,000/-, கல்வி உதவித்தொகை ரூ.50,000/-, ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.25,000/- வழங்கப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடுகள் பராமரிப்பு, தூய பால் உற்பத்தி மற்றும் மரபு வழி மூலிகை மருத்துவம் முதலிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. சங்க பணியாளர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு நவீன பால் பண்ணை தொழில் நுட்பங்களை அறிந்திட திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இல்லம் தேடி உறுப்பினர்களின் கறவைமாடுகளுக்கு செயற்கை முறை கருவுட்டல் வசதி செய்யப்பட்டுவருகிறது. கால்நடைகளுக்கு அவசர கால சேவை மையம் மூலம் அவசர கால மருத்துவ வசதி நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த மாதம் இராசிபுரம், நாமக்கல் மற்றும் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், பொன்பரப்பிப்பட்டி, இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் கூனவேலம்பட்டி, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், தாத்தையங்கார்பட்டி, காரைக்குறிச்சி மற்றும் அக்கியம்பட்டி ஊராட்சிகள், நாமக்கல் மாநகராட்சி, வசந்தபுரம், வகுரம்பட்டி மற்றும் மோகனூர் ஊராட்சி ஊராட்சி ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.1.82 கோடி மதிப்பீட்டில் 8 புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்களை திறந்து வைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் , இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், A.மின்னக்கல் ஊராட்சி மற்றும் இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் மலையாம்பட்டி ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.37.55 இலட்சம் மதிப்பீட்டில் 2 புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்களை திறந்து வைத்தார். மேலும், 2024-25 ஆம் ஆண்டில் அதிகளவில் பால் உற்பத்தி செய்து வழங்கிய முதல் 3 சிறந்த பால் உற்பத்தியாளர்கள் என மொத்தம் 06 நபர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில், அட்மா குழுத்தலைவர்கள் ஆர்.எம்.துரைசாமி (வெண்ணந்தூர்), கே.பி.ஜெகன்நாதன் (இராசிபுரம்), பொது மேலாளர் (ஆவின்) மரு.ஆர்.சண்முகம், துணைப்பதிவாளர் (பால்வளம்) ஐ.சண்முகநதி உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
