அரசு மருத்துவமனையில் பைக் திருட்டு நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை

அரசு மருத்துவமனையில் பைக் திருட்டு நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை
X
தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் பைக் திருட்டு நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனம் தொடர் திருட்டு .... நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் Ms.முத்து கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனை தூத்துக்குடி மைய பகுதியில் அமைந்துள்ளது.. தினமும் பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் இந்த அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். நோயாளிகளுக்கு உதவி செய்ய அவர்களின் உறவினர்களும் வருகின்றனர்... அவர்கள் இருசக்கர வாகனத்தில் அரசு மருத்துவமனையில் நிறுத்திவிட்டு நோயாளிகளை பார்த்துவிட்டு திரும்பி வரும்பொழுது இருசக்கர வாகன திருட்டு என்பது தொடர் கதையாக உள்ளது . காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . கண்கானிப்பு கேமரா உள்ளது.ஆனாலும் குறிப்பாக சமீபத்தில் அரசு மருத்துவமனையில் கூடுதலான இருசக்கர வாகனம் மற்றும் வழிப்பறி என்பது தொடர்கதையாக உள்ளது .மாவட்ட காவல் துறை கூடுதலாக காவலர்களை நியமித்து இரு சக்கர வாகனங்களை திருட்டிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாநகர செயலாளர் முத்து அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டார்.
Next Story