மல்லூர் வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளியில் பவுண்டேஷன் கோர்ஸ் ஆரம்பவிழா...

X
Rasipuram King 24x7 |14 Jun 2025 6:45 PM ISTமல்லூர் வீ.ஜி.விகாஸ் பப்ளிக் பள்ளியில் பவுண்டேஷன் கோர்ஸ் ஆரம்பவிழா...
மல்லூர் வீ.ஜி. விகாஸ் பப்ளிக் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குப் பவுண்டேஷன் கோர்ஸ் 14.06.25 சனிக்கிழமை அன்று தொடங்கப்பட்டது. இந்த பவுண்டேஷன் கோர்ஸ் மூலம் கான்செப்ட் வகுப்புகள் , அறிவியல், கணிதம்,போன்ற துறைகளில் நிலையான பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளி முதன்மை செயல் அலுவலர் திருநாவுக்கரசு விளக்கினார். குழந்தைகளின் அறிவுக்கும் எதிர்காலத்திற்கும் ஒரு தக்க அடித்தளமாக பவுண்டேஷன் கோர்ஸ் அமையும் என்று பள்ளித் தாளாளர் செல்லமுத்து பேசினார். இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் பள்ளிப் பாடங்கள் மட்டுமல்லாமல் ஆழ்ந்த கருத்து புரிதல், பிரச்சினைத் தீர்க்கும் திறன் மற்றும் அனலெட்டிக்கல் சிந்தனை போன்ற திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. இதற்கு பவுண்டேஷன் கோர்ஸ் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று பள்ளி முதல்வர் விஜயகுமார் உரையாற்றினார். இந்தத் திட்டம் மாணவர்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்று பெற்றோர் கருதினர். இத்திட்டம் தொடர்பான தங்களுடைய ஐயப்பாடுகளையும் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டனர். மேலும் அவர்கள் இத்திட்டம் வேண்டுமென நீண்ட நாட்களாக எதிர்பார்த்ததாகக் கூறினர்.பள்ளி நிர்வாக அலுவலர் வினோத்குமார் இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தார்.
Next Story
