சொர்ணாம்பிக்கை சமேத சங்கமேஸ்வரர் கோவில் விழா

சொர்ணாம்பிக்கை சமேத சங்கமேஸ்வரர் கோவில் விழா
X
சொர்ணாம்பிக்கை சமேத சங்கமேஸ்வரர் கோவில் விழா
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வீட்டு வசதி வாரிய பகுதியில் ராஜகணபதி, சொர்ணாம்பிகை சமேத சங்கமேஸ்வரர் கோவில் விழா நடந்தது. ராசிபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் காமராஜ் நகர் பகுதியில், 38ஆம் ஆண்டு சுற்றுப்பொங்கல் விழா நடந்தது. விழா நேற்று மாலை, 6 மணிக்கு விளக்கேற்றுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பகல், 12 மணிக்கு அபி ேஷக பூஜைகள் நடந்தன. மாலை, 4 மணிக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தன. இரவு, 7 மணிக்கு அலங்கார பந்தலில் கண் திறப்பும், பூஜை முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து வானவேடிக்கையுடன் அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், பகல், 12 மணிக்கு கிடா வெட்டி பொங்கல் வைக்கும் பூஜையும் நடக்கிறது. மேலும் விழா குழுவின் சார்பில் தலைவர் R.P. சீனிவாசன் அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி சிறப்பித்தார்.
Next Story