ஜெயங்கொண்டம் அருகே பாமக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு பாமக வக்கீல் பாலு டிஎஸ்பி இடம் புகார் மனு

X
ஜெயங்கொண்டம், ஜூன்.15- அரியலூர் மாவட்டம் கோவில்வாழ்க்கையை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் பாமகவில் பசுமை தாயாக அமைப்பின் ஆண்டிமடம் ஒன்றிய தலைவராக உள்ளார் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் மணிகண்டன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர் இதில் அதிர்ஷ்டவசமாக மணிகண்டன் அவரது குடும்பத்தினர் தப்பித்த நிலையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் சேதமடைந்தது இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார் புகாரில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி என்னை கொல்ல முயற்சி செய்த காடுவெட்டி இரவி(பாமக நிறுவனர் ராமதாஸ் நியமனம் செய்யப்பட்ட மாவட்ட செயலாளர்) மற்றும் அவரது தூண்டுதலின் பேரில் இந்த சதி செயலை செய்த நபர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்நிலையில் பாமக நிர்வாகி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி பாமக அன்புமணி ராமதாஸ் ஆதரவாளரான வழக்கறிஞர் பாலு இன்று ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டிடம் சந்தித்து மனு அளித்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பாலு பெட்ரோல் குண்டு வீசியது குறித்து புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதையடுத்து நேற்று போலீஸ் துணை சூப்பிரண்டிடம் சந்தித்து மனு அளித்துள்ளோம் இந்த சம்பவத்திற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார் இதில் ஈடுபட்டவர்கள் யார் என கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இது அரசியல் காழ்ப்புணர்ச்சியாக மாறி சட்டம் ஒழுங்கை பாதிக்கும் சம்பவமாக மாறிவிடக்கூடாது எனவே மாவட்ட காவல்துறை இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அடையாளம் காணும் வகையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என கூறினார்.பாமக அன்புமணி ராமதாஸ் ஆதரவு மாவட்டத் தலைவர் தமிழ்மறவன், நகர செயலாளர் மாதவன்தேவா படைநிலை செந்தில் உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Next Story

