மாமியாரின் பல்லை உடைத்த மருமகள்

மாமியாரின் பல்லை உடைத்த மருமகள்
X
அருமனை போலீஸ் விசாரணை
குமரி மாவட்டம் சிதறால் பகுதியை சேர்ந்த 55 வயது உடைய பெண்ணின் மகன் அதே ஊரை சேர்ந்த இளம் பெண்ணை காதலித்த திருமணம் செய்தார். அப்போது மருமகள் தனது மாமியார் இடமிருந்து ரூ.16 ஆயிரம்  கடனாக வாங்கினார். பின்னர் கணவன் மனைவியிடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டு மருமகள் வேறு ஒரு நபருடன் ஊரை விட்டு சென்று விட்டார்.        இந்த நிலையில் ஊரில் நடந்த ஒரு திருமண விழாவில் மருமகள் தனது 2 வது கணவருடன் வந்திருந்தார். இதை பார்த்த மாமியார் மருமகளிடம் சென்று கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி, மருமகள் தனது 2 வது கணவர், மேலும் இரண்டு நபருடன் சேர்ந்து மாமியாரை கடுமையாக தாக்கினர். இதில் மாமியாரின் இரண்டு பற்கள் உடைந்தது. இது குறித்த புகாரின் பேரில் அடுமனை போலீசார் வழக்கு பதிவு செய்து மருமகள் உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story