மத்திகோடு ஊராட்சியில் சாலை சீரமைப்பு

X
கிள்ளியூர், மத்திகோடு ஊராட்சிக்குட்பட்ட, நடுத்தேரி - குடுக்கச்சிவிளை – ஆனப்பந்தி - பிச்சன்விளை சாலை சீரமைத்து பல வருடங்கள் ஆகியதாலும், புயல் மற்றும் பெரு கனமழையினாலும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது. இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று கிள்ளியூர் எம்.எல்.ஏ. அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் பேரில் சாலையை சிரமைக்க ரூ. 40 - லட்சம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தில் (MGSMT) கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து நடுத்தேரி - குடுக்கச்சிவிளை – ஆனப்பந்தி - பிச்சன்விளை சாலை சீரமைக்கும் பணிகளை கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார். மத்திகோடு ஊராட்சி காங்கிரஸ்கமிட்டி தலைவர் மரிய அருள் தாஸ், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஆசீர் பிறைட் சிங், மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

