தொகுப்பு வீடு மேற்கூரை இடிந்து பெண் படுகாயம்!

X
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை சேவியர் காலனி சேர்ந்தவர் மேச்சன். மீனவரான இவருக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு சுனாமி குடியிருப்பு திட்டத்தில் அரசு சார்பில் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் அதே பகுதியில் 200 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலானதால் அதனை பராமரிப்பு செய்து தருமாறு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் மனு கொடுத்துள்ளனர். விரைவில் கட்டிக் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் மேக்சன் மனைவி சர்மிளா (45) வீட்டின் சமையல் கூடத்தில் காலை உணவு சமைக்க நின்றுள்ளார். அப்போது தொகுப்பு வீட்டின் மேற்கூரை பகுதி திடீரென்று இடிந்து விழுந்து உள்ளது. அப்போது அவரது குழந்தைகள் நான்கு பேர்களும், கணவனும் வெளியே இருந்ததால் காயம் இன்றி தப்பினர். காயமடைந்த ஷர்மிளாவை உறவினர்கள் அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர். 2005 ஆம் ஆண்டு பெரியதாழை, சேவியர் காலனியில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் அனைத்தும் பராமரிப்பு இல்லாமல் வெடிப்பு விழுந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர் ஆதலால் வீடு இடிந்து பெரும் உயிர் சேதம் ஏற்படும் முன் அரசுத்துறை அதிகாரிகள் இதனை கவனித்து தொகுப்பு வீடுகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story

