புனித அந்தோணியார் ஆலயத்தின் தேரோட்டத் திருவிழா

மதுரை பழங்காநத்தம் பகுதியில் புனித அந்தோணியார் ஆலயத்தின் தேரோட்டம் திருவிழா நடைபெற்றது
மதுரை பழங்காநத்தம் பகுதியில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத்தின் 173வது தேரோட்ட திருவிழா நேற்று (ஜூன்.14) இரவு நடைபெற்றது. 13 நாட்கள் நிகழ்ச்சியாக நடந்த இவ்விழாவில் எந்த ஒரு மத வேறுபாடு இன்றி கிறிஸ்துவர்கள், இந்து, முஸ்லீம், மும்மதத்தினர் அனைவரும் இணைந்து கலந்து வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சியை பங்குத்தந்தை சேவியர் ராஜ், அருணாச்சலம், அமானுல்லா.சலேஷ் துறை. இணைந்து துவக்கி வைத்தனர். மேலும் விழாவை ஊர் சபை பங்கு பேரவை, ஊர் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இணைந்து எந்த பாகுபாடின்றி நடத்திய இத்திருவிழா மத நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டு என்பது குறிப்பிடத்தக்கது. மாதா,அந்தோனியர் சிலை மின்னொளியால் அமைக்கப்பட்ட தேர் பவனி ஆர்சி தெருவில் உள்ள சர்ச்சில் இருந்து பழங்காநத்தம் முழுவதும் தேர் சென்றது. இவ்விழாவில் 2.ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கெண்டனர்.
Next Story