அரக்கோணம் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!

X
அரக்கோணத்தை அடுத்த நாகவேடு கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகள் பிரித்திமா (வயது 19). இவர், கடந்த 9-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஈஸ்வரன் அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று சம்பத்ராயன் பேட்டை பகுதியை சேர்ந்த முரளி (22) என்பவருடன் பிரித்திமா காதல் திருமணம் செய்து கொண்டு அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.இதனையடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேசினர். பின்னர் பிரித்திமாவை காதல் கணவருடன் அனுப்பிவைத்தனர்.
Next Story

