பைக் விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழப்பு

X
திண்டுக்கல் அருகே தோட்டனூத்து ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டூரை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 39). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அவரது மோட்டார் சைக்கிளில் ரெட்டியபட்டியில் இருந்து தோட்டனூத்து சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சரவணகுமார் திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த சரவணக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், சிறப்பு சார்பு ஆய்வாளர் வனராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த சரவணக்குமாருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

