அனந்தனார் சானலில் நீர் வரவில்லை - வவிவசாயிகள் புகார்

அனந்தனார் சானலில் நீர் வரவில்லை - வவிவசாயிகள் புகார்
X
அதிகாரிகள் புகார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னி பூ சாகுபடிக்காக ஜூன் ஒன்றாம் தேதி பாறை அணையும் திறக்கப்பட்டது. ஆனால் அனந்தநார் சானலில் நடைபெறும் பராமரிப்பு காரணங்களால் அணை திறந்து இரண்டு வாரங்களாகியும் இந்த சானலில் தண்ணீர் வரவில்லை. இது குறித்து அனந்தநார் பிரதான வாய்க்கால் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் செண்பக சேகர பிள்ளை தலைமையிலான விவசாயிகள் பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜை சந்தித்து இது குறித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்கள். சுமார் பத்தாயிரம் ஏக்கர் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் குறித்த காலத்தில் இந்த பராமரிப்பு பணிகளை செய்யாத தே இதற்க்கு காரணம் என சுட்டி காட்டியிருந்தார். இதனை அடுத்து அமைச்சரினுடைய உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் (வேளாண்மை) ஜென்கின் பிரபாகர்,செயற்பொறியாளர் வசந்தி, மற்றும் அதிகாரிகள் பராமரிப்பு பணி நடைபெறும் இடத்தை பார்வையிட்டு இன்னும் பத்து நாட்களுக்குள் பணி முடிந்து இந்த கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்படும் என உறுதியளித்தனர்.
Next Story