டாஸ்மாக்கின் ஊழல் மையமாக இருந்த கரூர், தற்போது மணல் கொள்ளையின் மையமாக உள்ளது - கே.பி ராமலிங்கம் பேட்டி.

டாஸ்மாக்கின் ஊழல் மையமாக இருந்த கரூர், தற்போது மணல் கொள்ளையின் மையமாக உள்ளது - கே.பி ராமலிங்கம் பேட்டி.
டாஸ்மாக்கின் ஊழல் மையமாக இருந்த கரூர், தற்போது மணல் கொள்ளையின் மையமாக உள்ளது - கே.பி ராமலிங்கம் பேட்டி. கரூர் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 11 ஆண்டுகால சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கவும், முருக பக்தர்கள் மாநாடு குறித்தும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி.இராமலிங்கம், செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அல்லது விடுவிக்கப்பட்டிருக்கிறார் என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். டிபார்ட்மெண்ட் தற்போது இல்லாததால் முன்பு டாஸ்மார்க் ஊழல் கரூர் மாவட்டத்தில் மையம் கொண்டிருந்தது. இப்போது அந்த மையம் மாறி மணல் கொள்ளையில் சென்றுள்ளது. அதற்காகத்தான் விடுவித்துள்ளார்களா? அதற்காக தான் தற்போது மணல் கொள்ளைக்கு ஒதுக்கி உள்ளார்களா? என்று தெரியவில்லை. மணல் அள்ளுவதற்கு ஒரு பர்மிட் வைத்துக் கொண்டு 100 மணல் லாரிகளை ஓட்டுகின்றனர். இதை கேட்பதற்கு ஆள் இல்லை, கேட்டால் லாரி விட்டு அடித்து விடுகிறார்கள். அதிகாரிகள் ஒருவர் கூட சென்று மணல் அள்ளுவதை பார்ப்பதில்லை. ஸ்டாலின் எப்போதெல்லாம் ரோட் சோ செல்கின்றாரோ, அன்றுதான் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, செயின் பறிப்பு எல்லாம் நடக்கிறது. கரூரில் இருந்து டிஜிபியை கேட்கிறேன். குற்றங்கள் எவ்வளவு நடந்துள்ளது என்று பட்டியல் கொடுக்க வேண்டும். முதல்வர் ரோட் சோ செல்லும்போது தான் அதிகம் நடக்கிறது. ஏனென்றால், ரோட் சோவிற்கு அதிகளவு காவல்துறையினரை பயன்படுத்துவது தான் காரணம் என்றார்.
Next Story