திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களில் முதல் போக பாசன வசதி பெரும் வகையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

வைகை அணை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை வட்டங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு முதல் போக சாகுபடிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு ஆணை வெளியிட்டிருந்தது அதன்படி இன்று காலை வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் அதனைத் தொடர்ந்து வைகை அணையில் இருந்து அமைச்சர்கள் ஏழு மதகுகள் வழியாக தண்ணீரைத் திறந்து விட்டனர் வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள 1,797 ஏக்கர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தில் உள்ள 16,452 ஏக்கர், மதுரை வடக்கு வட்டத்தில் உள்ள 26,792 ஏக்கர் என மொத்தம் 45,041 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது அணையில் இருந்து இன்று முதல் 45 நாட்களுக்கு 900 கன அடி வீதம் முழுமையாகவும், 75 நாட்களுக்கு தண்ணீர் இருப்பை பொறுத்து என மொத்தம் 120 நாட்களுக்கு 6739 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கால்வாய் பகுதியில் பொதுமக்கள் யாரும் இறங்கி குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணி துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
Next Story