ரத்ததான விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையத்தில் ரத்ததான விழிப்புணர்வு பேரணி மற்றும் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
குமாரபாளையம் ஓலப்பாளையம் பகுதியில் உலக ரத்த தான தினத்தையொட்டி விடியல் ஆரம்பம் மற்றும் எண்ணங்களின் சங்கமம் சார்பாக ரத்ததான விழிப்புணர்வு பேரணி மற்றும் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் நடத்தப்பட்டது. உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம் என்ற தலைப்பில் பேச்சு மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு ஓலப்பாளையம் ஊராட்சி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை லதா மற்றும் முன்னாள் ராணுவ வீரர் தேவராஜ் ஆகியோர் புத்தகம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்கள். ரத்ததானத்தை பற்றி கத்தேரி உயர்நிலைப்பள்ளி ஆசிரியை பங்கயம் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்கள். முக்கிய வீதிகளின் வழியாக நடந்த பேரணியில் பொதுமக்களுக்கு ரத்ததான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் சவுந்தர், கோமதி, கண்ணன், மதிவதனி, மற்றும் பலர் பங்கேற்றனர்.
Next Story