வாசவி கிளப் இராசிபுரம் மற்றும் வாசவி கிளப் வனிதா இராசிபுரம் இணைந்து டான் டூ டிஸ்க் சேவை திட்ட நலத்திட்ட உதவிகள்...

X
Rasipuram King 24x7 |15 Jun 2025 7:29 PM ISTவாசவி கிளப் இராசிபுரம் மற்றும் வாசவி கிளப் வனிதா இராசிபுரம் இணைந்து டான் டூ டிஸ்க் சேவை திட்ட நலத்திட்ட உதவிகள்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வாசவி கிளப் இராசிபுரம் மற்றும் வாசவி கிளப் வனிதா இராசிபுரம் இணைந்து டான் டூ டிஸ்க் என்னும் காலை முதல் மாலை வரை சர்வதேச வாசவி சங்கங்கள் பரிந்துரை செய்துள்ள பல்வேறு சேவை திட்ட பணிகள் செய்தனர். அவற்றில் ஒரு பகுதியாக இராசிபுரம் நகராட்சிக்கு இரண்டு 1000 லிட்டர் தண்ணீர் தொட்டி (டேங்க்) வழங்கியுள்ளனர். ஒன்று இராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கன்னையா தெரு பகுதிக்கும், இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு அருகேயும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சர்வதேச தலைமை நிர்வாக துணை தலைவர் மற்றும் சர்வதேச நிர்வாக குழு அதிகாரி. விஎன். டைமன்ட் ஸ்டார் கேசிஜிஎப் டாக்டர்.நாகபூஷணா, சர்வதேச நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விஎன் 3 ஸ்டார் கேசிஜிஎப். ஆர். ரெங்கராஜன், பிராந்திய தலைவி விஎன் 4 ஸ்டார் கேசிஜிஎப் பி. ஸ்ரீ லட்சுமி பிரியா, மண்டலத் தலைவி விஎன் 2 ஸ்டார் கேசிஜிஎப் டி.சந்தியா, பிராந்திய செயலாளர் விஎன் கேசிஜிஎப் எஸ். ஹரிராம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சேவை நிகழ்ச்சியை வாசவி கிளப் இராசிபுரம் தலைவர் விஎன் பி. மணிகண்டன், செயலாளர் விஎன் ஆர். பாலாஜி, பொருளாளர் விஎன் கேசிஜிஎப். வி. ரமேஷ், வாசவி கிளப் வனிதா இராசிபுரம் தலைவி விஎன் கேசிஜிஎப். எஸ். பூர்ணிமா, செயலாளர் விஎன். கேசிஜிஎப் எஸ்.உமா லட்சுமி, பொருளாளர் விஎன் கேசிஜிஎப். ஆர். கருணாதேவி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
Next Story
