பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் உண்டியல் திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று நபர்களை கைது

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் உண்டியல் திருட்டில் ஈடுபட்டு வந்த  மூன்று நபர்களை கைது
X
38,000 பணம் 2 கிராம் தாலி* ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் இன்று 15.06.2025 – ம் தேதி மேற்படி எதிரிகள் மூவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் உண்டியல் திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று நபர்களை கைது பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு உட்கோட்டம் குன்னம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பெரியாண்டவர் கோவில் பகுதியில் குன்னம் காவல் நிலைய *உதவி ஆய்வாளர் திரு.சரவணக்குமார் அவர்களின் தலைமையிலான தனிப்படையினர் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த 1.ராஜீவ்காந்தி (37) த/பெ கிருஷ்ணன், இருளர் தெரு, புதுவேட்டக்குடி. 2.செல்லமுத்து (48) த/பெ மருதமுத்து, பேருந்து நிறுத்தம் அருகில், புதுவேட்டக்குடி. 3. மணிவேல் (49) த/பெ மாரிமுத்து, இருளர் தெரு, புதுவேட்டக்குடி. ஆகிய 3 நபர்களை விசாரணை செய்ததில் அவர்கள் மூவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் மேலும் விசாரணை செய்ததில் இவர்கள் மூவரும் பெரம்பலூர், பாடாலூர், குன்னம் ஆகிய பகுதிகளில் கோவில் உண்டியல் திருட்டில் ஈடுபட்டது தெரிவந்தது. பின்னர் மேற்படி எதிரிகள் மூவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்த குன்னம் காவல்துறையினர் அவர்களிடமிருந்து ரூபாய்.38,000 பணம் 2 கிராம் தாலி ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் இன்று 15.06.2025 – ம் தேதி மேற்படி எதிரிகள் மூவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story