துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்த திமுகவினர்
மதுரை (15.06.25 ) திருப்பரங்குன்றம் செல்வ சரவணன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேனி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் நடைபெறும் இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து indigo விமானம் மூலம் இரவு 8.00 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு கட்சி தொண்டர்கள் திரளாக வரவேற்பு அளித்தனர். மதுரை வந்தடைந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர்கள் மூர்த்தி பி டி ஆர் தியாக ராஜன்,ஐ பெரியசாமி மதுரை மேயர் இந்திராணி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ,தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன் ஆகியோர் வரவேற்பளித்தனர்.
Next Story



